லினக்ஸ் கெர்னெல் பாதிப்பின் காரணமாக உலகம் முழுவதும் உள்ள 140 கோடி ஆன்ட்ராய்ட் போன்கள் பாதிக்கப் படும் அபாயம் உள்ளதாக இணைய பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. குறிப்பாக கிட்கேட் 4.0 மற்றும் அதற்கும் கீழ் உள்ள ஆன்ட்ராய்ட் போன்களில், லினக்ஸ் கெர்னெல் பாதிப்பை பயன்படுத்தி இணைய திருடர்கள் சங்கேத குறிப்பில் உள்ள தகவல்களை சிதைத்து அவற்றை திருட வாய்ப்பு உள்ளதாக கூறப் பட்டுள்ளது. ஆனால் தகவல் பரிமாறிக் கொள்பவர்களின் IP முகவரி தெரிந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.