உலகம் வெப்பமயமாதல் 20ம் நூற்றாண்டில் மட்டும் நடந்தது அல்ல, அது 180 வருடங்களுக்கு முன்பே துவங்கி விட்டது, என ஒரு புதிய ஆராய்ச்சி கூறுகிறது. இங்கிலாந்தில் தொழில் புரட்சி துவங்கிய போதே புவியின் வெப்பம் அதிகரிக்க துவங்கி விட்டதாம். இந்த காலத்தில் தான் முதன்முறையாக தொழிற்சாலைகள் காற்றில் கார்பன் வெளியிட ஆரம்பித்தன. ஆர்டிக் மற்றும் ட்ரோபிகல் கடல்களில் அதிகரித்த வெப்பம் பின்பு ஐரோப்பாவிற்கும் பரவியது. 1830ம் ஆண்டுகளில் துவங்கிய வெப்பமயமாதல் இன்று நவீன கார்கள், தொழிற்சாலைகள் என பன் மடங்கு அதிகரித்துள்ளது.