மார்பக புற்றுநோய்க்கு அடுத்தப் படியாக பெண்களை அதிக அளவில் பாதிப்பது கர்ப்பபை புற்றுநோயாகும். ஆரம்ப நிலையிலேயே இதனை கண்டறிந்தால் கீமோதெரபி மூலம் குணப்படுத்தி விடலாம். ஆனால் நோய் தாக்கம் ஏற்பட்டு 3 வருடங்கள் வரை இதை இனம் காண்பது கடினம் என கூறப்பட்டுள்ளது. தற்போதைய ஆய்வில், கர்ப்பபை புற்றுநோய் உள்ளவர்கள் உடலில் எஸ்.ஓ.எக்ஸ்.2 புரதத்தின் அளவை தெரிந்துகொள்வதன் மூலம், ஆரம்பத்திலேயே அதனைக் கண்டுபிடித்துக் குணப்படுத்திவிடலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.