ஸ்மார்ட் போன் தயாரிப்பில் கொடிகட்டி பறந்து வருகிற சாம்சங் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட 'கேலக்சி நோட் 7' மாடல் செல்போன், சார்ஜ் செய்யும் போது வெடிப்பதாக பல நாடுகளில் இருந்தும் புகார்கள் கிளம்பின. இதையடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள சாம்சங் நிறுவனம், விற்பனையான 51,060 போன்களை வாங்கிய கடைகளில் கொடுத்து வேறு மாடலை பெற்றுக் கொள்ள, வேண்டுகோள் விடுத்துள்ளது. உலகில் மொத்தமாக விற்பனையான 'கேலக்சி நோட் 7' போன்களை திரும்பப் பெற்றால், சாம்சங் நிறுவனத்திற்கு 100 கோடி டாலர்கள் வரை நஷ்டம் ஏற்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.