அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாண பல்கலைக்கழக நிபுணர்கள் அதி நவீன டி சர்ட்டுகளை தயாரித்துள்ளனர். இவை மின்சாரத்தை எடுத்துக் செல்லும் வகையில் மிக குறைந்த எடையுடன் கூடிய மூலப்பொருட்களால் தயாரிக்கப் பட்டுள்ளது. இந்த டி சர்ட் அணியும் போது உடலில் இருக்கும் வெப்பம் அதில் உள்ள மூலப்பொருட்களால் மின்சாரமாக மாறும், அதன் மூலம் மிக சிறிய அளவிலான எலெக்ட்ரானிக்ஸ் கருவிகளை இயக்க முடியும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். டி சர்ட்டில் ஒரு சதுர சென்டிமீட்டர் பரப்பளவில் 20 மைக்ரோ வாட் மின்சாரம் தயாரிக்க முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.