சர்க்கரை குறித்து 'ஜாமா' கிளப்பியுள்ள பீதி!

  varun   | Last Modified : 20 Sep, 2016 11:07 am
அமெரிக்க மருத்துவ இதழான 'ஜாமா', எண்ணெயைவிட உடலில் கொழுப்புச்சத்தை அதிகம் சேரவைத்து இதய ரத்தக் குழாய் நோய்கள் ஏற்பட பெரிதும் காரணமாக இருப்பது சர்க்கரைதான் என்ற உண்மையை வெளியிட்டுள்ளது. சர்க்கரை என்பது ஃப்ரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் சமபங்கு கலவை. இதில் ஃப்ரக்டோஸை ஜீரணிக்க கல்லீரலில் உள்ள நொதியால் மட்டுமே முடியும். அளவுக்கு அதிகமாக சர்க்கரை உண்ணும்போது, அதற்கு ஈடுகொடுத்து கல்லீரலால் அந்த நொதியைச் சுரக்கமுடியாத காரணத்தால், ஃபிரக்டோஸ் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேகரிக்கப்படும். இதுவே இதய ரத்தக் குழாய் அடைப்பு நோய்க்கு முக்கியக் காரணியாக அமைகிறது. மேலும், கல்லீரலில் கொழுப்பு சேர்வதால் குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கல்லீரல் வீங்கும் பிரச்னையான ஆல்கஹால் அல்லாத ஃபேட்டி லிவர் நோய் ஏற்படுகிறது. சர்க்கரையில் வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் என எந்த ஊட்டச்சத்தும் இல்லை. அது தருவது வெறும் கலோரிகளைத்தான். அவை கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் சேரிக்கப்படுவதால், உடல் பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் என பல பிரச்னைகளும் ஏற்படுமாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close