பாலின சோதனை விளம்பரங்களுக்கு இணையதளங்களில் தடை

Last Modified : 19 Sep, 2016 01:47 pm
தாயின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவதற்காக பாலின சோதனை நடத்துவது இந்தியாவில் சட்டப் படி குற்றமாகும். ஆனால் இணையதளங்களில் சுயமாக இதுபோன்ற பாலின சோதனை செய்வதற்கான கருவிகள் விற்பனை செய்யும் விளம்பரங்கள் அதிக அளவில் வருவதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என மருத்துவர் ஜார்ஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்த அரசு தரப்பு, Google, Yahoo and Microsoft போன்றவை இது போன்ற விளம்பரங்களை தடை செய்வதற்காக ஆட்டோ ப்ளாக் எனும் வசதியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தது. மேலும் இவ்வகையான தேடலுக்கு உதவும் 22 முக்கிய வார்த்தைகளை அட்டவணைப் படுத்தி கொடுத்திருப்பதாகவும், இதை தவிர்த்து வேறு விதமான வார்த்தைகள் இருந்தாலும் அவற்றையும் கண்டு பிடித்து இந்த ப்ளாக் லிஸ்டில் சேர்க்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close