உங்களது லேப்டாப்பின் பேட்டரியை காக்கும் வழிகள்

  varun   | Last Modified : 20 Sep, 2016 03:16 pm

பேட்டரியின் வாழ்நாளைப் பாதுகாக்க லேப்டாப்பினை முடிந்த வரை குளிர்ச்சியாக வைத்திருப்பது அவசியம். முடிந்தால் எப்பவும் கூலிங் பேட் பயன்படுத்துவது நல்ல பலன்களை தரும். லேப்டாப்பினை எந்நேரமும் சார்ஜ் செய்து பயன்படுத்தினாலும், பேட்டரியை முழுமையாக ஆஃப் ஆகவிடாமல் பயன்படுத்தும் போது, பேட்டரியை ரீகேலிபரேட் செய்ய வேண்டும். இதனைச் செய்ய முதலில் லேப்டாப் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்ய வேண்டும். பின் பேட்டரி முழுமையாகத் தீர்ந்து போகும் வரை அதனைப் பயன்படுத்த வேண்டும். சில லேப்டாப்களை பேட்டரி இல்லாமல் நேரடியாக மின்சாரம் செலுத்தப்பட்ட நிலையில் பயன்படுத்த முடியும். உங்களது லேப்டாப்பில் இது சாத்தியமெனில் நேரடியாக மின்சாரம் செலுத்து அதனை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது பேட்டரியின் ஆயுள் அதிகமாகும். இறுதியாக பேட்டரியை 100% சார்ஜ் செய்து சார்ஜர் கேபிளை அகற்றிப் பயன்படுத்த வேண்டும். பேட்டரியின் அளவு 3 அல்லது 5 சதவிகித அளவிற்கு வரும் போது அதனை மீண்டும் சார்ஜ் செய்வதால் அவற்றின் ஆயுள் நீடிக்கும் வாய்ப்புகள் இருக்கின்றது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close