இதய கோளாறுகளை கண்டுபிடிக்கும் ஆண்ட்ராய்டு கருவி

  sathya   | Last Modified : 20 Sep, 2016 09:54 pm
பின்லாந்து நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் கைபெருவிரல் அளவில் ஆன்ட்ராய்ட் ஆப் மூலம் செயல்படும் ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர். Beat2Phone என அழைக்கப்படும் இந்த கருவி, மனிதனின் இதய துடிப்புகளை சரியாக கணக்கிடுவது மட்டுமில்லாமல் அடுத்தடுத்த துடிப்புகளுக்கு இடையே உள்ள கால அவகாசத்தையும் துல்லியமாக கணித்து, கருவியை பயன்படுத்துவரின் மொபைல் போனுக்கு அனுப்பிவைக்கிறதாம். இதய நோய் உள்ளவர்களுக்கு இந்த கருவி வரப்பிரசாதம். இசிஜி-யை உடனே மொபைல் போனுக்கு அனுப்பி விடுவதால் இனி நோய் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த BEAT2PHONE இன்னும் 6 மாதங்களில் நுகர்வோர் கையில் கிடைக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மேலும் பலவிதமான இதய கோளாறுகளை இது முன்கூட்டியே தெரிவிக்கும் திறன் கொண்டது. இந்த இதய கோளாறுகளை மொபைல் போன் சேமித்து வைப்பதால், நோயின் அறிகுறிகள் இல்லாதவர்கள் பயன்படுத்தினாலும் முன்கூட்டியே இது இதய நோய் வருவதை அறிய உதவும். இந்த அதிநவீன கருவியின் விலையை விஞ்ஞானிகள் கூறவில்லை! இதயம் பக் பக் என்று அடிக்கிறது!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close