வருகிறது பறக்கும் கார்!

  mayuran   | Last Modified : 27 Sep, 2016 09:26 pm
பறக்கும் கார்களை 2018ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த இருப்பதாக ஸ்லோவாக்கியா நாட்டைச் சேர்ந்த ஏரோ மொபில் எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டு பேர் மட்டும் பயணிக்கும் இந்த காருக்கு ஏரோ மொபில் 3.0 என்று பெயரிடப் பட்டுள்ளது. இந்த காரில் உள்ள ஒரு சுவிட்சை இயக்குவதன் மூலம் இறக்கைகளைக் கொண்டதாக மாறி வானில் பறக்க முடியும் என்று தெரிவிக்கப் படுகிறது. 6M நீளமும், 2.4 M அகலமும் கொண்ட இந்த காருக்கு விலையாக ரூ.1.5 கோடி நிர்ணயிக்கப் படலாம் என்று கூறப்படுகிறது. இந்த காருக்கான முன்பதிவினை 2017ஆம் ஆண்டு தொடங்க இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close