வந்துவிட்டது விந்தணு பெற்றுக்கொள்ள புதிய ஆப்

  gobinath   | Last Modified : 28 Sep, 2016 10:06 am
தாய்மை அடைய ஏங்கும் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக, ஆன்லைன் மூலம் விந்தணு தானம் பெறுவதற்கான மொபைல் செயலி (ஆப்) உருவாக்கப்பட்டுள்ளது. லண்டன் விந்தணு வங்கியில் அறிவியல் இயக்குனராக பணியாற்றி வரும் இந்திய வம்சாவளி மருத்துவர் கமால் அஹுஜா என்பவரே அந்த ஆப்பை உருவாக்கியுள்ளார். அந்த ஆப்பில், விந்தணு தானம் செய்பவரின் கல்வித் தகுதி, வேலை, தனிப்பட்ட குணங்கள், உயரம், நிறம், தலைமுடி, கண் இமை உள்ளிட்ட அத்தனை விவரங்களும் சேகரிக்கப்பட்டிருக்கும். நேரடியாக விந்தணு தானம் பெற தயங்கும் பெண்கள் இந்த ஆப்பின் மூலமாக வீட்டில் இருந்தபடியே தாங்கள் விரும்பும் குணம் கொண்ட ஆண்களின் விந்தணுவை தேர்வு செய்து குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த ஆப் மூலம் விந்தணு ஆர்டர் செய்தவுடன் அந்த பெண் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் கருத்தரிப்பு மையத்துக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும் எனவும், இதற்கு கட்டணமாக ரூ.82,000 நிர்ணயிக்க ப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆப்பிற்கு ''order a daddy'' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close