அமெரிக்காவில் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் முதல்முறையாக மூன்று பேரின் மரபணுக்களைக் கொண்டு ஒரு குழந்தை பிறந்துள்ளது.
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் சிதைவடைந்த மரபணுக்களைக் கொண்ட பெற்றோர்கள் கூட ஆரோக்கியமான குழந்தையை பெற்றுக் கொள்ளலாம். ஜோர்டானிய வம்சாவளியை சேர்ந்த ஒரு தாயின் மரபணுவில் பிரச்சனை இருந்ததால் மூன்றாவதாக ஒரு நபரின் மரபணுவையும் செயற்கையாக இணைத்து அந்த தம்பதியினருக்கு குழந்தை பிறந்தது.
பின்னர் குழந்தைக்கு தாயின் மரபணு பிரச்சனை இருக்கிறதா என்று சோதனை செய்த போது, குழந்தை ஆரோக்கியமானதாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 'மைட்டொகோண்ட்ரியல் டொனேசன்' (mitochondrial donation) என்றழைக்கப்படும் இந்த சர்ச்சைக்குரிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் முன், கடுமையான சோதனைகள் செய்ய வேண்டியது அவசியம் என்று டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.
சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.