• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

குழந்தைகள் எதிரில் செய்யக் கூடாதவை

  varun   | Last Modified : 29 Sep, 2016 02:49 pm

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கண்ணாடி மாதிரி. அவர்கள் செய்வதை தான் குழந்தைகள் அப்படியே பிரதிபலிப்பார்கள். குழந்தைகள் முன்னர் பெற்றோர்கள் செய்ய கூடாத சில விஷயங்கள் உள்ளன. அவை என்னவென்று கீழே பார்க்கலாம்: * குழந்தைகள் முன்னிலையில் யாரையும் தவறாக பேசக் கூடாது. இது அவர்கள் மேல் குழந்தைகளுக்கு தவறான எண்ணத்தை உருவாக்குவதுடன், அவர்கள் எதிரிலேயே பெற்றோர்கள் அந்த நபரை பற்றி சொன்ன வார்த்தைகளை குழந்தைகள் சொல்லி விடுவார்கள். * குழந்தைகள் எதிரில் கணவன் மனைவி இருவரும் சண்டை போடவே கூடாது. இது அவர்கள் மனதை பாதிக்கும் முக்கிய விஷமாகும். மேலும் பெற்றோர்கள் மீது குழந்தைகளுக்கு ஒரு வித வெறுப்பை உண்டாக்கவும் வாய்ப்புகள் அதிகம். * உன் பிரண்டு எவ்ளோ மார்க் எடுத்துருக்கான் பாரு நீயும் இருக்கியே போன்று நம் குழந்தைகளை பிறருடன் ஒப்பிட்டு மட்டமாக பேசக் கூடாது. இது அவர்களுக்கு ஒரு வித தாழ்வு மனப்பான்மையை மனதில் ஏற்படுத்திவிடும். * மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற தீய பழக்கங்களையும், தீய வார்த்தைகளையும் குழந்தைகள் முன்பு செய்யவே கூடாது. இதெல்லாம் பின்னர் அவர்களையும் செய்ய தூண்டும் என்பதை பெற்றோர்கள் மறக்கக் கூடாது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close