இன்று விண்கல் மீது மோதுகிறது 'ரோஸெட்டா' செயற்கைக் கோள்

  shriram   | Last Modified : 30 Sep, 2016 11:31 am
விண்வெளி ஆராய்ச்சியிலேயே முதல் முறையாக ஒரு விண்கல்லை சுற்றி வந்து படம் பிடித்த 'ரோஸெட்டா' செயற்கைக்கோள் இரண்டு வருடங்களுக்கு பின் தனது பயணத்தை இன்று முடிவுக்கு கொண்டு வருகிறது. ஐரோப்பிய விண்வெளி கழகம் 2004ஆம் ஆண்டு செலுத்திய ரோஸெட்டாவை விஞ்ஞானிகள் அந்த விண்கல்லின் மீது தரையிறக்க திட்டமிட்டுள்ளனர். 67P எனப்படும் அந்த விண்கல் 4 கிமீ அகலம் உடையது. குறைந்த வேகத்தில் இறங்கினாலும் செயற்கைக்கோளின் பல பாகங்கள் உடைந்து செயலிழக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. 67P இதுவரை ஜுபிடரின் அருகில் சூரியனை வலம் வந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது அதன் பாதை சூரியனை விட்டு விலகிச்செல்ல துவங்கியுள்ளது. எனவே சூரிய சக்தியில் இயங்கும் ரோஸெட்டா இனி கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்க துவங்கிவிடும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறினர். இறங்கும் போது நட்சத்திரத்தின் மீதுள்ள பள்ளத்தாக்குகளை மிகத்தெளிவாக படம் பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். குட்பை ரோஸெட்டா!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close