சமூக வலைத்தளமான பேஸ்புக், தனது பயனர்களுக்காக Marketplace எனும் புதிய வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது. இதன் மூலம், ஒவ்வொருவரும் தாம் விற்க வேண்டிய பொருட்களை விளம்பரம் செய்து அவர்களின் நாட்டிற்குள்ளே விற்பனை செய்ய முடியும். இவ்வசதியினை மொபைலில் இலகுவாக பயன்படுத்தக் கூடிய வகையில் ஆப் ஒன்றினையும் பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது பேஸ்புக் குழுக்களின் (Facebook Groups) மூலம் மாதம் தோறும் சுமார் 450 மில்லியன் பேர் தமது பொருட்களை விற்பதுடன், பொருட்களைப் பெற்று வருவதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது.