2016- இயற்பியலுக்கான நோபல்பரிசு (வீடியோ)

  varun   | Last Modified : 05 Oct, 2016 06:29 pm
2016ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 பேரும் பிரிட்டனைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆவர். வாஷிங்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டேவிட் தெளலஸ், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டங்கன் ஹால்டேன், பிரவுன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் ஆகியோருக்கு இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. குவான்டம் மேட்டர் ஆய்வில் இதுவரை அறியப்படாத பருப்பொருள் மூலக்கூறுகள் குறித்து இவர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகளில் கிடைத்த பல புதிய தகவல்களுக்காக இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது. நோபல் பரிசின் ஒரு பகுதி டேவிட் ஜே.தெளலஸ்க்கும், இன்னொரு பாதி டங்கன் ஹால்டேன் மற்றும் ஜே.மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ்க்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. பருப்பொருட்களின் வழக்கத்துக்கு மாறான நிலைகள் பற்றிய அரிய ஆய்வுக்காக பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அதிமின்கடத்திகளையும் , காந்தப்புல படிவுகளையும் ஆய்வு செய்ய மிகவும் சிக்கலான கணிதவியல் மாதிரிகளைப் இவ்வாய்வாளர்கள் பயன்படுத்தியுள்ளனர். இவர்களது கண்டுபிடிப்பு எலக்ட்ரானிக்ஸ் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close