'கூகுள் பிக்சல்' - ஸ்மார்ட் போன்களின் புதிய ராஜா?

  shriram   | Last Modified : 05 Oct, 2016 01:13 pm
கூகுள் நிறுவனம் தனது பிரத்யேக தயாரிப்பான 'பிக்சல்' மற்றும் 'பிக்சல் XL' ரக ஸ்மார்ட் போன்களை நேற்று வெளியிட்டது. 4ஜிபி ரேம் வசதியுடன் 5 மற்றும் 5.5 இன்ச் ஸ்க்ரீன் கொண்டுள்ள இந்த போன்கள் ஆண்ட்ராய்டு 'நௌகட்' OSல் செயல்படுகின்றன. வெகுவாக பாராட்டப்பட்டுள்ள 12.3 மெகா பிக்சல் பின் கேமராவை வைத்து 4k தரத்திலான விடியோக்கள் மற்றும் 'Optical Image Stabilisation' வசதியுடன் தெளிவான புகைப்படங்களையும் எடுக்கலாம். இந்த பிக்சல் போனில் முதல்முறையாக 'கூகுள் அசிஸ்டண்ட்' சேவையை கொண்டு வருகிறது அந்நிறுவனம். குரல்வழி, நாம் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து செயல்படும் திறன் கொண்டது இந்த செயலி. போனில் எடுக்கும் புகைப்படங்களை சேர்த்துவைக்க அளவில்லா க்ளவுட் ஸ்டோரேஜ் சேவையையும் இந்த போனுடன் கூகுள் வழங்குகிறது. 15 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே 7 மணிநேரம் இயங்கும் சக்தி கொண்ட பேட்டரியும் இதன் சிறப்பம்சங்களுள் ஒன்று. இதற்கு முன் வெளியான நெக்சஸ் போன்கள் போல் அல்லாமல் முழுக்க முழுக்க தனது சொந்த தொழில்நுட்பத்தில் இந்த போனை கூகுள் உருவாகியுள்ளது. ஆப்பிள் ஐபோனின் நேரடி போட்டியாக வெளியாகும் பிக்சல் ரக போன்களின் தொடக்க விலை இந்தியாவில் 57,000 ரூபாய். ரிமோட் கண்ட்ரோல் வசதியுடன் தனது 'Daydream' VR கண்ணாடியையும் கூகுள் அறிமுகப்படுத்தியது. மேலும், 'க்ரோம்காஸ்ட் அல்டரா' என்ற டிவி மூலம் இணையதளம் உபயோகிக்கும் கருவியையும் வெளியிட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close