பெரிதாகிறது சாம்சங் பிரச்சனை; மாற்றி கொடுத்த போனும் வெடித்தது

  நந்தினி   | Last Modified : 06 Oct, 2016 06:27 pm
சவுத்வெஸ்ட் விமானம் 994-ல் பயணி ஒருவருடைய சாம்சங் கேலக்ஸி நோட் 7 போன் வெடித்திருக்கின்றது. ஏற்கனவே பலமுறை இது போன்ற சம்பவங்கள் நடந்திருந்தாலும் தற்போது வெடித்துள்ள இந்த போன், சமீபத்திய சர்ச்சைக்கு பின் சாம்சங் நிறுவனம் திரும்ப பெற்று மாற்றாக கொடுத்த 'Safe' போன் ஆகும். விமானத்தில் வெடித்த கேலக்ஸி நோட் 7 பயணி, தனது போனை செப்டம்பர் 21 ஆம் தேதி வாங்கியதாகவும், இது பாதுகாப்பானது என்பதை உறுதி செய்யும் 'Safe' மார்க் அச்சிடப்பட்டு உள்ளதாகவும், போனின் பேட்டரி இன்டிகேட்டரும் பச்சை நிறத்தில் தான் இருந்தது என்றும் அவர் கூறினார். மேலும், போன் வெடிக்கும் முன் போனில் 80 சதவீதம் வரை சார்ஜ் இருந்ததாகவும், விமானத்தில் போனை தான் ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்திருந்ததாகவும் தெரிவித்த அவர், தனது பாக்கெட்டில் இருந்து புகை கிளம்பிய உடனே போனை தரையில் போட்டிருக்கின்றார். இது குறித்து சாம்சங் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "குறிப்பிட்ட கருவி இன்னும் ஆய்வு செய்யப்படவில்லை. ஆய்வு முடிந்ததும் தான் கூடுதல் தகவல்களை பகிர முடியும்" என குறிப்பிட்டிருந்தனர். முன்னதாக சாம்சங் நிறுவனம் சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான கருவிகளை திரும்பப் பெற்றது. இந்தியாவில் நோட் 7 கருவிகளை விமானங்களில் எடுத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடை கூட சில தினங்களுக்கு முன் தான் விலக்கப்பட்டது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close