கூகுள் ப்ளே ஸ்டோரில் பரவும் மால்வேர்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

"ட்ரெண்ட் மைக்ரோ" எனும் மென்பொருள் பாதுகாப்பு சேவை நிறுவனம் கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள 400-க்கும் மேற்பட்ட செயலிகள் 'ட்ரஸ்கோட்' என்னும் மால்வேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக அதிகம் டவுன்லோட் செய்யப்படும் கேம்ஸ், தீம்ஸ் மற்றும் அலைபேசி மேம்பாட்டு செயலிகளை இந்த மால்வேர் தாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது. இவற்றை டவுன்லோட் செய்யும் போது 'த்ரெட் ஆக்டர்ஸ்கள்' நம் அலைபேசியில் நுழைந்து உள்ளிருக்கும் தகவல்களை திருடுகின்றன. மேலும் அலைபேசியை கணினியோடு இணைத்தால் கணினியும் இந்த பாதிப்பிற்கு ஆளாக நேரிடும். தற்போது இதனை அழிப்பதற்கான நடவடிக்கைகளை கூகுள் எடுத்து வருகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close