ஜப்பானில் உருவாக்கப்பட்டுள்ள குழந்தை ரோபோ (வீடியோ)

  varun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஜப்பானில் அதிக அளவில் ‘ரோபோ’ பயன்பாடு உள்ளது. இந்த நிலையில் மகப்பேறு இல்லா தம்பதிகளின் குறையை போக்கவும், தனிமையில் இருப்பவர்களின் வெறுமையை தணிக்கவும் ‘ரோபோ’ குழந்தைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு ‘கிரோபோ மினி’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ரோபோவை பியூமோனோரி கடயாகோ என்ற நிபுணர் வடிவமைத்துள்ளார். இந்த குழந்தை ரோபோ அழகாக கண் சிமிட்டுகிறது. குழந்தை போன்று மழலை குரலில் பேசுகிறது. சிரிக்கிறது, அழுகிறது. அதன் விலை ரூ. 25,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த எந்திர குழந்தைகள் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வருகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close