தலைகீழாக மாறப்போகும் பூமியின் காந்த துருவம்... ஆய்வாளர்கள் பகீர் தகவல்!

  SRK   | Last Modified : 06 Feb, 2018 01:40 pm

நமது பூமியை சுற்றியுள்ள காந்த புலம் குறைந்து வருவதாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி கழகம் கண்டறிந்துள்ளது. இது ஏதோ ஹாலிவுட் அறிவியல் கதை இல்லை... நாம் வசிக்கும் பூமியில் நிகழ்ந்த, நிகழப்போகின்ற மாற்றம்... நம்முடைய சகோதர கிரகமான செவ்வாயில் இப்படி ஒரு மாற்றத்தின்போதுதான் காந்தப்புலம் முற்றிலும் இல்லாமல் போனது. பயப்பட வேண்டாம்... என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்...

பூமி ஒரு மிகப்பெரிய சுழலும் காந்தம். வட துருவம் முதல் தென் துருவம் வரை அதன் காந்த புலம் அடர்ந்து இருக்கும். பூமியின் மையப் பகுதியில் அதீத வெப்பத்தில் நெருப்பு குழம்பு சுழன்று வருகிறது. இரும்பு உள்ளிட்ட பல தாதுக்கள், மையத்தில் குழம்பாக சுழன்று வருவதால், அதன் விளைவாக பூமியை சுற்றி காந்த புலம் உருவாகியுள்ளது.

பூமியை சுற்றியுள்ள இந்த காந்த புலம், சூரியனில் இருந்தும், விண்ணில் இருந்து வரும் ஆபத்தான கதிர்வீச்சுகளில் இருந்து நம்மை காக்கின்றனது. இதனால்தான் பூமியில் உயிரினம் இன்னும் இருக்கிறது.

பூமியின் காந்தப்புலம் மாறிக்கொண்டே இருக்கக் கூடியது என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். நீங்கள் 8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருந்தால், உங்கள் கையில் காந்தபுல காம்பஸ் இருந்திருந்தால் அதன் முள் தென்திசையைத்தான் காட்டியிருக்குமாம். காந்த முள் எப்போதும் வடக்குத் திசையைத்தானே காட்டும் என்று கேட்கலாம்... அந்தக் காலத்தில் தென்திசையில்தான் காந்தப்புலம் இருந்தது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

தற்போதுள்ள வட - தென் காந்த துருவங்கள் 22 டிகிரி சரிந்துள்ளன. இது அடுத்த காந்த துருவத்திற்கான அறிகுறி என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த மாற்றம் நிகழும் போது, பூமியின் காந்த புலம் கணிசமாக குறையுமாம். இந்நிலையில், 200 ஆண்டுகளுக்கு முன் இருந்த காந்த புலத்தை விட தற்போது 15% குறைந்து காணப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த மாற்றம் அவ்வப்போது நிகழக் கூடியதா என்று தோன்றலாம். ஆம் என்கின்றனர் விஞ்ஞானிகள். பூமி தற்போது உள்ள நிலையை அடைந்து 2 கோடி ஆண்டுகள் ஆகிறதாம். இதில். 2 லட்சம் முதல் 3 லட்சம் வரையிலான காலத்துக்கு ஒருமுறை இந்த காந்தப் புல மாற்றம் ஏற்படுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்த மாற்றம் ஒன்று இரண்டு நாளில்... ஒன்று இரண்டு ஆண்டுகளில் நிகழ்வது இல்லை... இதற்கு 1000 ஆண்டுகளுக்கு மேல் ஆகுமாம். அடுத்த காந்த துருவ மாற்றம் இன்னும் 2000 ஆண்டுகளில் நடக்க வாய்ப்புள்ளதாம். அப்படி நடக்கும்போது, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திடற்கு பூமியின் காந்த புலம் சிதறடிக்கப்பட்டு நிலையில்லாமல் இருக்கும்.

இந்த சமயத்தில், சூரியனில் இருந்து வரும் ஆபத்தான கதிவீச்சுக்கள் எளிதாக பூமியின் மேற்பரப்பை வந்தடையும். அப்போது வரலாறு காணாத அளவில் பூமிக்கும், இங்கு வாழும் உயிரினங்களுக்கும் சேதம் ஏற்படும் என கூறப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close