• சென்னையில் குடிநீர் இணைப்பு பெற புதிய இணையதளம்!
  • திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்

அழிந்தது கடல் தாவரம்... அதிகரித்தது 9 டன் கார்பன் டை ஆக்ஸைடு!

  PADMA PRIYA   | Last Modified : 20 Mar, 2018 07:22 pm

ஆஸ்திரேலியாவில் 2010ல் ஏற்பட்ட அதிகப்படியான வெப்பம் காரணமாக, 420 சதுர மைல் அளவிற்கு கடல் தாவரங்கள் அழிந்ததாகவும் அதன் காரணமாக கார்பன் டை ஆக்ஸைடு அளவு அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆஸ்திரேலிய கடல் பகுதியில், கடந்த 2010-ஆம் ஆண்டு கோடை வெப்பம் மிகவும் அதிகரித்தது. கடலின் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்தது. இரண்டு மாதங்கள் வரை இந்த நிலை நீடித்தது. இதனால் 420 சதுர மைல் (1100 சதுர கிலோ மீட்டர்) பரப்பளவில் இருந்த அரிய வகை கடல் தாவரங்கள் அழிந்து விட்டதாக அந்நாட்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை கடல் ஈர்க்கும் தன்மை கொண்டது. இதை கடலில் உள்ள தாவரங்கள் பயன்படுத்தி ஆக்சிஜனை வெளியிடும். 1100 சதுர கி.மீ பரப்பில் தாவரங்கள் அழிந்தவிட்டதால், கார்பன் டை ஆக்ஸைடை ஈர்த்து, ஆக்சிஜன் வெளியிடும் செயல் முற்றிலும் நின்றுவிட்டது.

இதன் காரணமாக, ஆஸ்திரேலியாவில் 9 டன் அளவுக்கு கார்பன் டை ஆக்ஸைடு அளவு அதிகரித்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது, 16 லட்சம் கார்கள் ஓராண்டு முழுவதும் இயங்கினால் வெளிப்படும் கார்பன் டை ஆக்ஸைடு அளவாகும். ஷார்க் பே கடல் பகுதியில் வெப்ப அனல்காற்று வீச்சுக்கு முன்பும், பின்பும் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படத்தை வைத்து இதை விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். தற்போது. இந்த கடல் பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக மாறுதல் நடந்துவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close