சுற்றுச்சூழலை பாதுகாக்க ஈஸி டிப்ஸ் 12

  திஷா   | Last Modified : 05 Jun, 2018 02:24 pm

12-ways-to-protect-the-environment

சுற்றுச் சூழல் மாசடைவது உயிரினங்கள் அனைத்தையுமே கடுமையாக பாதிக்கும். இன்றைய கால கட்டத்தில் உலகை பயம் கொள்ளச் செய்யும் முதல் பத்து விஷயங்களில் இந்த சுற்றுச் சூழல் பாசுபாடும் ஒன்றாகும். இதனை ஐக்கிய நாடுகள் சபையே தெரிவித்துள்ளது. நிலம், நீர், காற்று, ஆகாயம் என அனைத்துமே நாளுக்கு நாள் அதிகளவில் மாசடைந்துக் கொண்டிருக்கிறது. 

மக்கள் தொகை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றால் சுற்று சூழல் அதிகம் பாதிக்கப்படுகிறது. இதை உணர்ந்த அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் சீரழிவிற்கு காரணமான செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. 1960 களில் இருந்து, சுற்றுச்சூழல் இயக்கங்களின் செயல்பாடுகள் பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. 

அதோடு கல்வி நிறுவனங்கள் இப்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு முறைகள், சுற்றுச்சூழல்கல்வி, சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் போன்ற படிப்புகளை வழங்குகின்றன. உலக சுற்றுச் சூழல் தினமான இன்று சுற்றுச் சூழலை எப்படி பாதுகாக்கலாம் என்பதைப் பற்றி பார்ப்போம். 

மறு சுழற்சி செய்வதற்கு ஏதுவான பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.

எப்போதாவது மட்டுமே பயன்படக் கூடிய பொருட்களை நண்பர்களிடம் கடனாகவோ, அல்லது வெளியிடங்களில் வாடகைக்கோ வாங்கிக் கொள்ளலாம்.

மறு சுழற்சி செய்வதற்கு தகுதியான மெட்டீரியல்களையோ அல்லது சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காதபடி வடிவமைக்கப் பட்ட பொருட்களையோ உபயோகியுங்கள்.

பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்திடுங்கள். அவைகள் சுற்றுச் சூழலுக்கு மட்டுமல்ல உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும் என்பதை உணர்ந்திடுங்கள். 

கடைகளுக்குப் போகும் போது வீட்டிலிருந்து துணி பை போன்றவற்றை எடுத்து செல்ல வேண்டும்.

வீட்டை விட்டு வெளியே செல்லும் போது மின் விளக்குகள் மற்றும் இதர உபகரணங்களை அணைத்து விட வேண்டும். 

முடிந்தளவு பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள். உங்கள் ஒருவருக்காக ஐந்தாறு பேர் செல்லக் கூடிய பெரிய வாகனத்தை எடுத்து செல்ல வேண்டாமே.

வீட்டைச் சுற்றி நிழல் தரும் மரங்களை வளர்ப்பது காற்றில் உள்ள மாசைக் குறைக்க உதவும்.

மரம் வளர்க்க முடியாதவர்கள், குறைந்தபட்சம் புல்லை வளர்த்தால் கூட போதும். அது, கார்பன் டை ஆக்ஸைடை இழுத்து, ஆக்சிஜனை வெளியிடும்.

பெரிய பெரிய செடி வளர்க்கும்போது பலன் கிடைக்க நாட்கள் ஆகும். ஆனால், புற்களை வளர்ப்பதன் மூலம் ஒரு சில நாட்களிலேயே ஆக்சிஜன் அறுவடையை தொடங்கிவிடலாம்.

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவோம். நீர் நிலைகளை தூர்வாறுவது, பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதை அரசுதான் செய்ய வேண்டும் என்று இல்லாமல், விவசாயிகள் குழுவாக இணைந்து செய்யலாம். குறைந்தபட்சம் நீர் நிலைகளுக்கு உள் வளர்ந்து நிற்கும் செடி, கொடிகளை அகற்றுவதன் மூலம் தங்கு தடையற்ற நீரோட்டத்தை ஏற்படுத்த முடியும்.

சுற்றுப்புற சூழலை பாதுகாப்பது என்பது அரசாங்கத்தின் கடமை, அதில் தனி மனிதனுக்கு பங்கு இல்லை என்று கருத வேண்டாம். நாம் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் சுற்றுச் சூழலை பாதுகாக்கும். அதனால் நம் ஓவ்வொருவருக்கும் இதில் இருக்கும் பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.