பூமியின் வளங்கள் மொத்தமும் காலியான தினம் ஆகஸ்டு 1

  Padmapriya   | Last Modified : 05 Aug, 2018 06:52 am

earth-overshoot-day-arrives-earlier-than-ever

ஆகஸ்டு 1ம் தேதி இந்த ஆண்டின் 'எர்த் ஓவர் ஷூட் தினம்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பூமியின் மொத்த வளங்களையும் மனித சமுதாயம் பயன்படுத்தி காலி செய்த தினம் தான் இவ்வாறு அழைக்கப்படுகிறது. 

இந்த பூமி மனிதனுக்கு மட்டும் சொந்தமானது இல்லை. பூமியில் வசிக்கும் புல், பூண்டில் இருந்து எல்லா ஜீவராசிகளுக்கும் சொந்தமானது. ஆனால், அனைத்தையும் மனிதன் தன்னுடைய சுயநலத்துக்காக சுரண்டிக்கொண்டிருக்கிறான். காற்றில் கார்பன்டை ஆக்சைடை கலப்பது முதல் இயற்கை வளங்களை சுரண்டுவது வரை ஏராளமான அத்துமீறல்கள் நடந்துகொண்டே இருக்கின்றன.

மனிதனால் இப்படி சூறையாடப்படும் வளங்கள் பற்றிய ஆய்வு அறிக்கையை குளோபல் ஃபுட்பிரிண்ட் நெட்வொர்க் என்ற அமைப்பு வெளியிட்டு வருகிறது. அதாவது, ஒரு வருடம் முழுவதும் பயன்படுத்த தேவையான இயற்கை வளம், எவ்வளவு நாளில் காலி செய்யப்படுகிறது என்று இந்த அமைப்பு அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி இந்த ஆண்டுக்கு தேவையான இயற்கை வளங்கள் காலி செய்யப்பட்ட நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 2018ம் ஆண்டு முழுதும் பயன்படுத்த வேண்டிய இயற்கை வளம் அவ்வளவும் முதல் 7 மாதத்துக்குள்ளாகவே அழிக்கப்பட்டுவிட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

தற்போது பூமியின் அளவில் கிட்டத்தட்ட 1.7 மடங்கு இயற்கை வளங்களை மனித இனம் பயன்படுத்தி வருகிறது. இது 2030ல் இரண்டு பூமி அளவாக அதிகரிக்கும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு அதிக அளவில் மீன் பிடிப்பதும், வனப்பகுதிகளை அழிப்பதும் ஒரு காரணமாக உள்ளது. இதனால் காற்றில் அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடு கலப்பதும் காரணமாக அமைந்துள்ளது.

இப்படி ஒரு வருடம் முழுவதும் பயன்படுத்தத் தேவையான இயற்கை வளங்களை முன்கூட்டியே காலி செய்வது தொடர்பான ஆய்வு அறிக்கை தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. கடந்த 1997ல் வளங்களை காலி செய்த  தினம் செப்டம்பர் மாதத்தில் வந்ததது. கடந்த ஆண்டு இந்த தினம் ஆகஸ்ட் 2ம் தேதி வந்தது. இந்த ஆண்டு ஒரு நாள் முன்னதாக ஆகஸ்ட் 1ம் தேதி வந்துள்ளதாகவும் அந்த ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. 

மக்கள் தங்களின் தேவைக்காக இயற்கை வளங்களை அழித்து வருவதன் வேகம் இந்த ஆய்வின் மூலம் கண்கூடாக நிரூபனமாகியுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.