ஆக்ஸிஜன் அப்பா !

  பாரதி பித்தன்   | Last Modified : 29 Oct, 2018 06:49 pm
father-of-oxygen

டெல்லியில் கடந்த சில நாட்களாகவே புகை சூழ்ந்து விட்டதால் நடமாடவே முடியவில்லை பாவம் குழந்தைகள் எப்படிதான் சுவாசித்தார்களோ, இதில் ஒரு நல்லது நடந்தது என்றால், தீபாவளிக்கு முன்பே இப்படி ஏற்பட்டதால் பட்டாசு தான் சுற்றுச்சூழல் மாசு பட காரணம் என்ற கூக்குரல் எடுபடாமல் போனது. இந்த அபாயம் டெல்லியில் மட்டும் அல்ல, உலகின் அனைத்து ஊர்களிலும் உள்ளது. நமக்கு வெளிப்படையாக தெரிந்தது டெல்லி. மனிதன் சுவாசிப்பது கூட சுற்றுச்சூழல் மாசுதான். அவன் காற்றில் உள்ள ஆக்கிஸிஜனை இழுத்துக்கொண்டு கார்பன்டை ஆக்சைடை வெளியேற்றி தன் பங்கிற்கு மாசு ஏற்படுத்துகிறான். மூச்சுவிடுதே குற்றம் என்றால் மற்ற குற்றங்கள் பற்றி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 

இதன் காரணமாகத்தான் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவில் மரம் தங்கசாமி, திருவண்ணாமலை மரம் கருணாநிதி, வடமாவடத்தை சேர்ந்த மரம் மாசிலாமணி போன்றவர்கள் மரம் வளப்பிற்காக தங்களின் வாழ்வையே அர்பணித்துக் கொண்டனர். அதில் மரம் தங்கசாமி மற்றவர்களை மரம் வளக்க சொல்வதைவிட தானே பத்து ஏக்கரில் காடு ஏற்படுத்தி இருந்தார். இவர்கள் விவசாயிகள். ஒன்மேன் ஆர்மியாக செயல்படுகிறவர்கள். அகில இந்திய அமைப்பு ஒன்றின் மாநில அமைப்பாளர், தென்மாநில அமைப்பாளர், அகில பாரத வழிகாட்டு குழு உறுப்பினர் என பலவித பொருப்புகள் வகித்தவர், இவற்றிக்கு நடுவே 10 ஆயிரம் விதைப்பந்துகளை தனி ஒருவராக தயாரித்தள்ளார் என்றால் நம்பவா முடிகிறது. நம்பிக்கைகாக உண்மை தன்னை மாற்றிக் கொள்வதில்லையே, அதனால் பாரதீய கிசான் சங்கத்தின் தென் பாரத வழிகாட்டும் ஆலோசனைக்குழு உறுப்பினரான ஸ்ரீகணேசனை சந்திக்க அவர் தங்கி இருக்கும் சாதானா அறக்கட்டளை அலுலகத்திற்கு சென்றேன்.  அவரது உரையாடலில்...

தண்ணீர் பற்றாக்குறை, பணக்குறை போன்றவற்றை விட மிக அபாயகரமான நிலையில் இருப்பது ஆக்ஸிஜன் பற்றாக்குறை. இதற்கு தீர்வு நாட்டு பசு, மரம் வளர்ப்பது தான். மரம் மட்டும் தான் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை வெளியிட்டு கார்பன்டை ஆக்சைடை பழம், பூ என்று மாற்றித் தருகிறது. கிசான் சங்கம் விவசாயிகள் வாழ்க்கையுடன் கலந்துவிட்டதால் மரம் வளர்ப்பை அவர்களுடன் இணைந்து செய்ய முடிவு செய்வோம். கிசான் சங்க உறுப்பினர் ஒருவர்  ஆண்டு தோறும் மற்ற 5 பேரை சேர்க்க வேண்டும், அவர்கள் 6 பேரும் 6 மரக்கன்றுகள் நட்டு பாதுகாக்கா வேண்டும். நான் தலைவராக இருந்தாலும் எனக்கும் அந்த கடமை உண்டு. அதற்காக மரக்கன்றுகள் உருவாக்க தொடங்கினேன். பிளாஸ்டிக் பையில் கன்று நட்டு வளர்த்தால், அதை பராமரிக்க முடியாத நிலை. இதன் காரணமாக கண்டு பிடித்தது தான் விதை பந்துகள்.

விதைப் பந்துகளை மழைக்காலத்தில் நீர்பாதையில் சுமார் ஒன்றரை அங்குலம் பள்ளம் பறித்து நட்டால் போதும் அது தானே வளர்ந்து விடும். பராமரிப்பதும், கொண்டுசெல்வதும் எளிது. இதனால் நான் சுற்றுப்பயணம் செய்யும் இடங்களில் புளி,வேம்பு, பூக்கள், கனி வகைகள் போன்றவற்றின் விதைகளை சேகரித்து அவற்றை களிமண், செம்மண் போன்றவற்றில் விதைத்து விதைப்பந்து உருவாக்குவேன். இந்த பணி கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இது வரை 10 ஆயிரம் விதைப் பந்துகள் தயாரித்துள்ளேன். இந்த பணி தொடர்ந்து நடக்கிறது. இவற்றை சங்க கூட்டத்திற்கு எடுத்து சென்று விவசாயிகளிடம் கொடுத்து பராமரிக்க செய்து, சிறிது வளர்ந்த உடன் அந்த கிளையில் மரக்கன்று நடும் விழா நடைபெறும். இப்படி ஆண்டிற்கு 2 இரண்டரை லட்சம் மரக்கன்று நடுகிறோம். 

உலகில் ஒரு டிரில்லியன் உயிரினங்கள் உள்ளன. அவற்றில் வேறுபட்ட உயிரினம் பசு மட்டும்தான். எத்தனை தரமான உணவு உண்டால் கூட மறுநாள் அது கழிவுதான். ஆனால் மனிதனுக்கு பயன்படாத கழிவுகளை உண்டு, அதனை தன் வயிற்றிக்குள் வடிகட்டி, பிரித்து பால், சாணம், மூத்திரம் ஆகியவற்றை தருவது பசு மட்டும்தான். பசும் சாணத்தில் ஒரு சொட்டு நெய்யை ஊற்றி எரித்தால் அந்த பகுதி முழுவதும் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும். 

போபால் விஷவாயு விபத்தில் அக்னிஹோத்திரி வீ்ட்டில் மட்டும் பாதிப்பு ஏற்படாததே இதற்கு ஆதாரம். அதனால் தான் மக்கள் கூடும் திருமணம், கும்பாபிஷேகம், திருவிழா போன்றவற்றில் ஹோமங்கள் நடக்கின்றன. ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடும் போது அவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் வேண்டும் அல்லவா. அதே போல பசுகோமியம், பால், நெய், தயிர், பசு சாணி ஆகியற்றை கலந்து பஞ்சகவியம் உருவாக்கி தெளித்தால் போதும் இயற்கையான உணவு கிடைப்பதுடன், மண்ணும் வளப்படும். நாட்டுப் பசுவை காத்தால் அது நம்மை காக்கும் என்ற இலக்கை அடைந்தால் தான் அடுத்த தலைமுறை அல்ல நாமே வாழ முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

நாள்தோறும் சுற்றுப்பயணம், விவசாயிகள் அன்றாட பிரச்னைகளை தீர்ப்பது என்று பல வேலைகள் இருந்தாலும், மனித குல மேம்பாட்டிற்கு வெளியே தெரியாமல் உழைக்கும் ஸ்ரீகணேசன் காட்டும் வழியில் நடப்பது தான் நமக்கு செய்து கொள்ளும் நன்மை டெபாசிட்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close