அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி!

  முத்துமாரி   | Last Modified : 18 Jan, 2018 01:40 pm


இந்தியா இன்று அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சோதனை செய்துள்ளது. 

இன்று காலை 9.53 மணிக்கு ஒடிசா கடற்கரையில் உள்ள அப்துல் கலாம் தீவு பாதுகாப்பு சோதனை நிலையத்தில் இருந்து அக்னி-5 ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது. அணு ஆயுதங்களை தாங்கிச் செல்ல கூடிய அக்னி-5 ஏவுகணையானது 5,000 கி.மீ தூரம் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. மேலும், இந்த ஏவுகணை 17 மீட்டர் நீளமும், 50 டன் எடையும் கொண்டுள்ளது.

அக்னி வகை ஏவுகணைகளிலேயே மிக அதிக சக்தி வாய்ந்த ஏவுகணையாக இது கருதப்படுகிறது. மைக்ரோ அளவில் கூட துல்லியமாக வழிகாட்டும் தன்மை உடையது. இந்த ஏவுகணை 5,000 கி.மீ இலக்கை சென்றடையும் சோதனை இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இதற்கு முன்னதாக நடைபெற்ற அக்னி ஏவுகணையின் 4 சோதனைகளும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close