1 லட்சம் கிமீ வேகத்தில் பூமியை நெருங்கும் மெகா விண்கல்

  SRK   | Last Modified : 19 Jan, 2018 10:31 pm


விண்ணில் இருந்து மணிக்கு 67,000 மைல் (சுமார் 1,08,000 கிமீ) வேகத்தில் ஒரு பெரிய விண்கல் பூமிக்கு அருகே வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

துபாயில் உள்ள உலகின் மிகப்பெரிய கட்டிடமான புர்ஜ் கலிபாவின் அளவுக்கு பெரியதாக இந்த விண்கல் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் அதீத வேகத்தை பார்க்கும்பொது, இதைவிட வேகமான பொருள் எதுவும் பூமிக்கு அருகே தற்போது இல்லையென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

பிப்ரவரி 4ம் தேதி, சுமார் 2,615,128 கிமீ தூரத்தில் இது பூமியை கடந்து செல்லும் என்றும் தெரிவித்துள்ளது நாசா. AJ129 என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல்லின் பாதையை தொடர்ந்து கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close