பூமிக்கு தண்ணீரை கொண்டுவந்த விண்கற்கள்! புதிய ஆய்வு

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 21 Jan, 2018 06:52 pm

பூமி கிரகத்துக்கு விண் கற்கள் மூலமாகத்தான் தண்ணீர் வந்திருக்கும் என்று புதிய ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர் அமெரிக்க ஆய்வாளர்கள்.

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) ஆய்வாளர்  ஆடம் சரபிஃயன் கூறுகையில், "ஆரம்ப சூரிய மண்டலத்தில் இருந்த விண்கற்களை ஆய்வு செய்து வருகிறோம். தோராயமாக 4.56 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய மண்டலத்துக்குள் இந்த விண்கற்களின் தாய் கிரகம் உருவாகியிருக்கும் என்று கருதப்படுகிறது.

சூரிய மண்டலம் உருவான போது பூமியில் தண்ணீர் இல்லை. சூரிய மண்டலம் உருவாகி 20 லட்சம் ஆண்டுகள் கடந்த பிறகுதான் பூமி குளிரத் தொடங்கியது. அப்போது, விண்கற்கள் மூலமாகத்தான் பூமிக்கு தண்ணீர் வந்துள்ளது. விண்கற்கள் மூலமாகத்தான் பூமியில் உயிர்கள் வாழ அத்தியாவசிய தேவையாக உள்ள கார்பன் மற்றும் தண்ணீர் பூமியை வந்தடைந்திருக்கலாம். அப்போது பூமியின் அளவு என்பது தற்போது உள்ளதில் 20 சதவிகிதம்தான் இருந்திருக்க வேண்டும்" என்கிறார் அவர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close