இந்த ஆண்டின் முதல் விண்வெளி நடை... 6 1/2 மணி நேரம் நீடித்தது

  பா.பிரவீன் குமார்   | Last Modified : 24 Jan, 2018 06:34 pm

விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டு விஞ்ஞானிகள் மையத்துக்கு வெளியே வந்து விண்வெளி நடையை மேற்கொண்டனர். ஆறரை மணி நேரம் இந்த விண்வெளி நடை நடந்ததாக நாசா தெரிவித்துள்ளது. 

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தங்கியிருக்கும் விஞ்ஞானிகள் ஸ்காட் டிங்கில், மார்க் டி வாண்டே இந்த ஆண்டின் முதல் விண்வெளி நடையை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து விண்வெளி நடை மேற்கொள்வதற்கு முன் டிங்கில் கூறுகையில், "இது என்னுடைய வாழ்நாளின் மிகப்பெரிய சாதனையாக இருக்கும். விண்வெளி ஆய்வு மையத்துக்கு வெளியே சென்று சிஸ்டத்தில் உள்ள பழுதுகளை நீக்க உள்ளோம்" என்றார். 

இதைத் தொடர்ந்து விஞ்ஞானிகள் இருவரும் வெளியே சென்று பழுது நீக்கும் பணியை மேற்கொண்டனர். விண்வெளி ஆய்வு மையத்தில் இரண்டு ரோபோட்டிக் கைகள் உள்ளன. இதில், ஒரு கையில் கிழிசல், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை மாற்றும் பணியை இவர்கள் மேற்கொண்டனர். இந்த ரோபோடிக் கைதான், விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பப்படும் சரக்குகளைப் பிடிக்க உதவியாக இருக்கின்றன. 

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் நடத்தப்பட்ட 206வது விண்வெளி நடைப்பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close