அக்னி-1 ஏவுகணை சோதனை வெற்றி!

  முத்துமாரி   | Last Modified : 06 Feb, 2018 12:37 pm


அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் அக்னி-1 ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது. 

அக்னி-1 ஏவுகணை பன்னிரண்டு டன் எடையும், 15 மீட்டர் நீளமும் கொண்டது. சுமார் 700 முதல் 1250 கி.மீ தூரத்திற்கு நொடிக்கு 2.5 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. மேலும், 1000 கிலோ கிராம் எடையுடைய வெடிபொருள் அல்லது அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் தன்மையுடையது.

இதனையடுத்து இன்று அக்னி-1 ஏவுகணை சோதனை நடைபெற்றது. ஒடிசா கடற்கரையில் இருந்து இன்று காலை 8.30 மணிக்கு ஏவப்பட்ட இந்த அக்னி-1 ஏவுகணை 700 கி.மீ. தொலைவில் இருந்த இலக்கை துல்லியமாக தாக்கி சாதனை படைத்தது.

இதற்கு முன்னதாக, கடந்த மாதம் 18ம் தேதி கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close