உங்கள் பெயரை சூரியனுக்கு அனுப்புகிறது நாசா!

  SRK   | Last Modified : 08 Mar, 2018 02:00 pm


நாசா விஞ்ஞானிகள் சூரியனுக்கு ஒரு புதிய செயற்கைக்கோளை அனுப்புகின்றனர். இந்த செயற்கைக்கோளில் ஒரு மெமரி கார்டை இணைத்து, அதில் பூமியில் இருப்பவர்கள் அனுப்பும் பெயர்களை பதிவு செய்து அனுப்பவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

பார்க்கர் சோலார் செயற்கைக்கோள் இன்னும் சில மாதங்களில் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் இருந்து ஏவப்படுகிறது. 

இதுவரை எந்த மனித இயந்திரமும் செல்லாத அளவு சூரியனை இந்த செயற்கைக்கோள் நெருங்கும் என கூறப்படுகிறது. சூரியனின் மேற்பரப்பில் இருந்து 40 லட்சம் மைல் தூரம் வரை இந்த செயற்கைக்கோள் செல்லும். அங்கிருந்து சூரியனை ஆய்வு செய்யவுள்ளது. இதுவரை சூரியனை பற்றி தெரியாத பல விஷயங்கள் நமக்கு தெரிய வரலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த செயற்கைக்கோள் சூரியனை பற்றி ஆய்வு மேற்கொள்வது மட்டுமல்லாமல், ஒரு மெமரி கார்டு மூலம் பல விஷயங்களை கொண்டு செல்கிறது. இந்த மெமரி கார்டில் தங்கள் பெயரையோ, தாங்கள் விரும்பும் பெயரையோ பதிவு செய்து அனுப்ப பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 27 வரை இந்த இணையதளத்திற்கு சென்று பெயர்களை அனுப்பலாம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close