விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்த ஜிஎஸ்எல்வி ராக்கெட்!

  முத்துமாரி   | Last Modified : 29 Mar, 2018 05:16 pm


ஜிசாட்- 6ஏ செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து வெற்றிகரமாக இன்று விண்ணில் ஏவப்பட்டது. 

இஸ்ரோவின் அடுத்த மைல்கல்லாக இந்திய விஞ்ஞானிகளால் கிரையோஜெனிக் தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி -எஃப்08 ராக்கெட் மூலம் ஜிசாட்- 6ஏ செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டது. விண்ணில் செலுத்துவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த இதன் 27 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று பிற்பகல் துவங்கியது. 

இந்நிலையில் இந்த செயற்கைக்கோள், ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து இன்று(மார்ச்.29) மாலை 4:56 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. 10 ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் இந்த ஜிசாட்-6ஏ செயற்கைக் கோள் பன்முக எஸ்-பேண்ட், ஒருமுக சி-பேண்ட் அலைவரிசை மூலமாக தகவல்களை பெற முடியும்.  

ஜிஎஸ்எல்வி-எஃப்08 ராக்கெட் இந்தியாவின் 12வது ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஆகும். 49.1 மீட்டர் நீளம், 415.6 டன் எடை கொண்டது. மேலும் இஸ்ரோவின் தலைவராக டாக்டர் சிவன் பங்கேற்ற பிறகு முதல் முறையாக ஏவப்பட்ட செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close