செவ்வாய் கிரகத்தில் உயிரினங்களா? சொல்கிறார் இந்த யூடியூப் பதிவாளர்

  ஐஸ்வர்யா   | Last Modified : 29 Mar, 2018 09:47 pm


செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில், ஆயிரக்கணக்கான உயிரினங்கள் மொத்தமாக ஊர்ந்து செல்வது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா? உயிரினங்கள் அங்கு வாழ இயலுமா? என்ற ஆராய்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகின்றது. இந்த ஆராய்ச்சிக்காக ‘Curiosity Rover' என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பி வைத்தது. இந்த விண்கலத்தில் Mastcam எனும் கமெரா, அங்குள்ள காட்சிகளை படம் பிடிப்பதற்காக பொருத்தப்பட்டிருந்தது.


இதனைத் தொடர்ந்து, Rover விண்கலம் செவ்வாய் கிரக நிலப்பரப்பில் உள்ள காட்சிகளை படம் பிடித்து அனுப்பி வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் இந்த விண்கலம் அனுப்பியுள்ள படத்தில் செவ்வாய் கிரக மேற்பரப்பில், ஆயிரக்கணக்கான உயிரினங்கள் மொத்தமாக ஊர்ந்து செல்வது தெரிவதாக ஒரு யூடியூப் பதிவாளர் கூறி வருகிறார்.


இது குறித்து யூடியூப் பதிவாளரான நீல் எவன்ஸ் கூறுகையில், "இந்த புகைப்படம் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்து வருவதை தெளிவு படுத்துகிறது. இந்த படத்தை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக ஆராய்ந்தேன். பூமியின் இடங்களில் பறவைகள் பார்வைக் காட்சிகளுடன் அதை ஒப்பிடும்போது, அது வட துருவத்திற்கு அடுத்ததாக இருக்கிறது. இந்த படங்கள் அனைத்தும் குறைந்த ரெசல்யூஷன் கொண்டவையாகும். இருந்தாலும், இதில் நீங்கள் தெளிவான நீர் கோடுகளை பார்க்க முடியும். ஏரிகள், தாவரங்கள் அல்லது சில வகையான வாழ்க்கை வடிவங்கள், நீர் ஆதாரத்தின் மீது வெளிப்படும் விதமாக இருக்கும்" என தெரிவித்துள்ளார். 

நீல் இவ்வாறு கூறினாலும், இதுகுறித்து விஞ்ஞானிகள் மத்தியில் எந்த கருத்தும் இல்லை. தற்போது செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள்  கிடையாது என விஞ்ஞானிகள் திட்டவட்டமாக கூறிவருகின்றனர். ஆனால், கியூரியாசிட்டியின் புகைப்படங்களை வைத்து, பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னதாக, உயிரினங்கள் வாழ்வதற்கான தட்பவெப்ப சூழல்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்ததாக சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இனி வரும் காலங்களில் செவ்வாய்க்கு அனுப்பப்படும் செயற்கைகோள்கள் மற்றும் விண்வெளி ஓடங்கள் மூலம், இதுகுறித்து மேலும் பல தகவல்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. காத்திருப்போம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.