IRNSS-1l செயற்கைக்கோளை சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தியது பிஎஸ்எல்வி

  Newstm Desk   | Last Modified : 12 Apr, 2018 09:36 am


பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இன்று நவீன IRNSS-1l செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைகோள் வெற்றிகரமாக சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, பிஎஸ்எல்வி ராக்கெட் இன்று அதிகாலை ஏவப்பட்டது. இந்த ராக்கெட், 1425 கிலோ எடை கொண்ட  IRNSS-1l  என்ற நவீன செயற்கைக்கோளை கொண்டு சென்றது. இந்தியா முழுவதும் உள்ள இடங்களை துல்லியமாக கண்டுபிடிக்க இஸ்ரோ உருவாக்கி வரும் NavIC என்ற பிரத்யேக நேவிகேஷன் திட்டத்தில் இந்த செயற்கைகோள் ஒன்றாகும். 

அதிகாலை 4.04 மணியளவில், ராக்கெட் ஏவப்பட்டது. அடுத்த 19 நிமிடங்களில் அது விண்ணிற்கு சென்று, IRNSS-1l செயற்கைக்கோளை சுற்றுவட்டப்பாதைக்கு கொண்டு சென்றது. இனி அங்கிருந்து சுமார் 36,000 கிமீ உயரத்தில் அந்த செயற்கைகோள் தன்னை நிறுத்திக் கொள்ளும். 

ரூ.1420 கோடி செலவில் உருவாகி வரும் NavIC திட்டத்தில் மொத்தம் 9 செயற்கைகோள்களை உண்டு. சுற்றுவட்டப்பாதையில் 7 செயற்கைகோள்களும், 2 மாற்று செயற்கைகோள்களும் இதில் அடங்கும். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close