அதிவேக இன்டெர்நெட்டுக்கு செயற்கைக்கோள்களை அனுப்பியது ஸ்பேஸ்எக்ஸ்

  SRK   | Last Modified : 23 Feb, 2018 11:59 am


அமெரிக்க விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ்எக்ஸ் நேற்று மூன்று செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பியது. அந்நிறுவனம் திட்டமிட்டு வரும் சர்வதேச அளவிலான அதிவேக இன்டெர்நெட்டுக்காக அதில் இரண்டு செயற்கைக்கோள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் சமீபத்தில் செவ்வாய் கிரகம் வரை செல்லும் தனது ஃபால்கன் ஹெவி ராக்கெட்டை விண்ணுக்கு செலுத்தியது. அந்த ராக்கெட்டில் தனது காரை அனுப்பி, அதை விண்ணில் மிதக்க வைத்து, உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார், அந்நிறுவன தலைவர் ஈலான் மஸ்க். அதன்பிறகு, தனது அடுத்த திட்டமாக, உலக அளவில் எல்லா நாடுகளுக்கும் அதிவேக இன்டெர்நெட் சேவைகளை வழங்க மஸ்க் திட்டமிடுவதாக கூறப்பட்டது.

இதற்காக பூமியை சுற்றி சுமார் 12,000 செயற்கைக்கோள்களை விண்ணில் நிறுத்த வேண்டுமாம். இதை செயல்படுத்த பல வருடங்கள் ஆகும் என கூறப்பட்டாலும், ஏற்கனவே அதற்கான சோதனை வேலைகளை ஸ்பேஸ்எக்ஸ் துவக்கி விட்டது.

ஸ்பெயின் நாட்டின் PAZ என்ற செயற்கைக்கோளை, நேற்று தனது ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் விண்ணுக்கு செலுத்தியது. அதிநவீன ரேடார் கொண்டது PAZ செயற்கைக்கோள். இந்த செயற்கைக்கோளுடன், ஸ்பேஸ்எக்ஸ் தனது அதிநவீன இன்டெர்நெட் சேவைக்கான இரண்டு சோதனை செயற்கைக்கோள்களையும் அனுப்பியுள்ளது. இது வெற்றியடையும் பட்சத்தில், அடுத்தகட்டமாக பல நூறு செயற்கைக்கோள்களை வரும் ஆண்டுகளில் ஸ்பேஸ்எக்ஸ் அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close