இன்று சூரியப் புயல்: பூமியின் ஒரு பாதி ஸ்தம்பிக்கும் அபாயம்!

  PADMA PRIYA   | Last Modified : 14 Mar, 2018 01:12 pm

இன்று சூரியப் புயல் ஏற்பட உள்ள நிலையில், செயற்கைகோள்கள் முடக்கத்தினால் பூமியின் மின்னணு கருவிகள் முடங்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

சூரியனின் மேற்பரப்பில் 2 மிகப்பெரிய பிரமாண்டமான தீப்பிழம்புகள் உருவாக உள்ளது. இது வழக்கத்தை விட அதிக திறனுடன் பூமியை நோக்கிப் பாயும் என்று தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் ஒரு 'G1' புயல் கடிகாரத்தை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக பூமியின் காந்த விசையுடன் மோதி சூரியப் புயல் உருவெடுக்கும்.

தற்போது பூமியை சுற்றி நூற்றுக்கணக்கான செயற்கை கோள்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சூரிய புயல் தாக்குதலால் செயற்கை கோள்களின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும். இதனால் ஸ்காட்லாந்து, வடக்கு இங்கிலாந்தின் பகுதிகள்,  மிச்சிகன் மற்றும் முக்கிய பகுதிகளையும் உள்ளடக்கிய அமெரிக்காவின் வடக்குப் பகுதிகளிலும் பாதிப்பு ஏற்படும். 

இவற்றின் காரணமாக, விமானங்களின் ஜி.பி.எஸ். சிஸ்டமும் பாதிக்கும். மேலும் பூமியின் சில இடங்களில் மின் வினியோகத்திலும் பாதிப்பு ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close