இந்தாண்டு இறுதியில் சந்திரயான் 2 விண்ணில் பறக்கும்: இஸ்ரோ சிவன்

  Newstm Desk   | Last Modified : 13 May, 2018 06:08 pm

சந்திராயன் 2 விண்கலம்  இந்த ஆண்டு இறுதியில் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள சரக்கல்விளை பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ''நடப்பாண்டில் குறைந்தது 8 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக கூறினார். குறிப்பாக, டேட்டா ரேட் கொண்ட மிகப்பெரிய செயற்கைக்கோளான ஜி சாட் 29, ஜி சாட் 7 மற்றும் அதிநவீன செயற்கை கோள்கள் செலுத்தப்பட உள்ளது. நாவிக் கருவிகள் தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது  அக்கருவிகள் மீனவர்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறினார்.

மேலும், ''சந்திராயன் 2 விண்கலம் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளதாகவும், இந்த  ஆண்டு இறுதியில் அது விண்ணில் செலுத்தப்படும்'' எனவும் அவர் தெரிவித்தார். 

முன்னதாக சரக்கல்விளை அவர் படித்த அரசு தொடக்க பள்ளியைப் பார்வையிட்டார். அந்த பள்ளியை நவீனமயமாக்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக அவர் அங்கு சென்றிருந்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close