செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழமுடியும்- மயில்சாமி அண்ணாதுரை

  ஐஸ்வர்யா   | Last Modified : 30 Jun, 2018 06:55 am
humans-can-be-lived-in-mars-says-mayilasamy-annadurai

செவ்வாய் கிரகத்தில் உயிர் இனங்கள் வாழ்வதற்கேற்றால் போல் நீர், நிலம் மற்றும் சீதோசன நிலை உள்ளதாக மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்துவது அதன் பயன்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே இஸ்ரோவின் முக்கிய பணியாகும்.

செயற்கை கோள்கள் மூலம் பூமியில் உள்ள கடல் வளம், மண் வளம் உள்ளிட்ட பல்வேறு இயற்கை வளங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செவ்வாய் கிரகத்தில் உயிர் இனங்கள் வாழ்வதற்கேற்றால் போல் நீர், நிலம் மற்றும் சீதோசன நிலை உள்ளது. இதுகுறித்து தற்போது ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என கூறினார். 

பூமியில், பேரிடர் ஆபத்துகளை முன்கூட்டியே கண்டறிவது குறித்த ஆய்வில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் ஈடுபட்டுள்ளதாக கூறிய அவர், நிலவை ஆராய்ச்சி செய்ய சந்திராயன், செவ்வாயை ஆராய்ச்சி செய்ய மங்கள்யான், சூரியனை ஆராய்ச்சி செய்ய ஆதித்யா ஆகிய செயற்கைகோள்கள் வரும் காலங்களில்  விண்ணில் ஏவப்படவுள்ளது. விண்வெளியில் உயிரினங்கள் வாழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்ற ஆராய்ச்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் செவ்வாய் மற்றும் நிலவு ஆகியவைகளில் உயிரினங்கள் வாழ முடியுமா? அங்கு பயிர் சாகுபடி செய்ய முடியுமா? என்பது குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். நிலவை விட செவ்வாயில் உயிரினங்கள் வாழ அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்தார். 


 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close