விண்வெளி சுற்றுலா போறீங்களா... ஜஸ்ட் ரூ.1.37 கோடிதான்! - அமேசான் அதிரடி

  கனிமொழி   | Last Modified : 19 Jul, 2018 02:58 pm
amazon-launches-space-tour-rocket

விண்வெளிக்கு சுற்றுலா பயணம் செல்ல வேண்டும் என்ற ஆசை இங்கு பலருக்கு உண்டு. நம் குழந்தை பருவத்தில் அம்மா சோறு ஊட்டும் போது நிலாவை காண்பித்து ஏமாற்றி சோறு ஊட்டியதாலோ என்னமோ தெரியவில்லை எல்லோருக்கும் அந்த நிலாவில் காலடி பதிக்கவேண்டும் என்ற ஆசை வந்துவிடும். எளிதில் கையில் கிட்டாத , உயரம் எட்டாத ஒரு விஷயத்துக்கு ஆசை படுவதே மனித இயல்பு. அது போல தான் இந்த விண்வெளி சுற்றுலா பயணமும். விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் ராக்கெட்டை 9-வது முறையாக அமேசான் நிறுவனம் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது. 'ப்ளூ ஆரிஜின்' என பெயரிடப்பட்டுள்ள இந்த ராக்கெட் அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியில் இருந்து நேற்று ஏவப்பட்டது.

மற்ற ராக்கெட்டுகள் போல இல்லாமல் 'ப்ளூ ஆரிஜின்' ஒரு விசித்திரமான தோற்றம் கொண்டுள்ளது. விண்வெளிக்கு ஏவப்பட்ட சில விநாடிகளில் சுமார் 120 கிலோ மீட்டர் உயரத்திற்கு சென்று 'கேப்சுல்' என்ற ஒரு அறையை கழற்றி விட்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது. 60 அடி நீளமான ராக்கெட்டின் மேலே பொறுத்த பட்ட இந்த கேப்சுல் 6 பேரை ஏற்றிச்செல்லும் வகையில் வடிவமைக்க பட்டுள்ளது. சோதனைக்கு அனுப்பப்பட்ட இந்த கேப்சுலும் 10 நிமிடத்தில் பூமியை வந்து சேர்ந்ததாக அமேசான் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜெப் பெசோஸ் தெரிவித்துள்ளார்.

 2019-ம்  ஆண்டில் இந்த விண்வெளி சுற்றுலா ராக்கெட் செயல்படுத்தப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அமேசான் நிறுவனத்திற்கு போட்டியாக விர்ஜின் கலக்ட்டிக் என்ற பிரிட்டிஷ் நிறுவனமும் முதலாவது சுற்றுலா ராக்கெட்டை செயல்படுத்தும் முறையில் ஈடுபட்டுவருகின்றது. அமேசான் நிறுவனத்தின் ப்ளூ ஆரிஜின்  ராக்கெட்டில் பயணிக்க ஒருவருக்கு 1.37 கோடி ரூபாய் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close