சந்திரகிரகணத்துல இதலாம் செஞ்சிடாதீங்க! ப்ளீஸ்...

  ஐஸ்வர்யா   | Last Modified : 26 Jul, 2018 02:40 pm
dont-do-this-work-when-lunar-eclipse

இன்னும் இரண்டு நாட்களில் வானில் நிகழவுள்ள அதிசய சந்திரகிரகணத்தின்போது இதையெல்லாம் செய்யாமல் இருந்தால் நல்லது என பெரியவர்கள் ஃபிரி அட்வைஸ் கொடுத்துள்ளனர். 

சூரியன், சந்திரன், பூமி இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரனில் விழும் நிகழ்வுக்கு சந்திரகிரகணம் என அறிவியல் ரீதியில் கூறுகின்றனர். அதாவது புரியும்படி சொன்னால் கிரகணம் என்பது சூரியன், சந்திரன், பூமி மூன்றுக்கும் இடையிலுள்ள கண்ணாமூச்சி விளையாட்டு ஆகும். கிரகணத்தின் போது சூரியனுக்கும் நிலவிற்கும் இடையே பூமி பயணிக்கும். அந்த சமயத்தில் பூமியின் படும் சூரியக் கதிர் பிரதிபலிப்பு நிலவில் விழும் ஒளிந்து கொள்ளும். இதனால் பூமியின்மீது படும் சூரியக் கதிர்கள் நிலவில் விழும்.விண்வெளி கண்ணாமூச்சு ஆட்டத்திற்குள் நாம் ஏன் செல்லவேண்டும் என்ற கேள்வி ஏழலாம். ஆனால் நம்மை சுற்றிதான் இந்த அதிசய நிகழ்வு நடக்கிறது. 

கிரகண நேரத்தில் செய்யக்கூடாதவை: 

  • கிரகணத்தை நாம் வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது என பெரியவர்கள் அறிவுறுத்துகின்றனர். பிரகாசமான ஒளி விழித்திரையை பாதிக்கும் என்பதால் இவ்வாறு கூறப்படுகிறது. சூரிய கிரகணத்தைவிட இரவில் தோன்றும் சந்திர கிரகணம் அவ்வளவு வீரியமாக இருக்காது எனவே சந்திரனை பார்ப்பதால் எந்த பாதிப்பும் இல்லை. 
  • கிரகணத்தின்போது கதிர்வீச்சு வெளிபாடு அதிகம் இருக்கும், அது உயிரினங்களின் தோல்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வெளியில் வராமல் இருப்பது நல்லது.
  • சந்திரகிரகணத்தின்போது தண்ணீர்கூட அருந்தாமல் இருக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம், ஆனால் கிரகணத்திற்கு முன்பு சமைக்கப்பட்ட ஊட்டச்சத்து மிக்க உணவு கிரகணத்திற்கு முன் விஷமாக மாறிவிடுவதாக மூடநம்பிக்கையுள்ளது. ஆனால் உண்மையில் வயிறு நிறைய சாப்பிட்டால் நாம் அமைதியாக ஆழ்ந்த தெய்வ சிந்தனையுடன் இருக்க மாட்டோம், சந்திரகிரகணத்தின்போது ஆழ்ந்த தெய்வ சிந்தனையில் இருக்க வேண்டும் என்பதால்தான் உணவருந்தகூடாது  என கூறுகின்றனர். 
  • உண்மையில் கிரகணத்தின்போது, மற்ற நாட்களைவிட சமைத்த உணவு அதிவிரைவாக சிதைவுறும். ஆதலால் கிரகணத்திற்கு முன் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடக்கூடாது என பெரியவர்கள் கூறுகின்றனர். 
  • கிரகணம் என்பது தோஷ காலமாக கருதப்படுவதால் கிரகண நேரத்தில் கோயில்களில் வழிபாடுகள் நடக்காது. எனவே கிரகணத்தின் போது கோயிலுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். 

கர்ப்பிணிகளுக்காக https://goo.gl/BMj2md

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close