வருது சந்திர கிரகணம்! கிளம்பலாம் கிரிவலம்!!

  ஐஸ்வர்யா   | Last Modified : 26 Jul, 2018 02:39 pm
lunar-eclipse-will-go-for-a-temple

ஜூலை 27 ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இது நூற்றாண்டின் மிகப்பெரிய கிரகணம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சந்திரகிரகணத்தின்போது கிரிவலம் சென்றால் நல்லது என்கின்றனர் ஜோதிட மகான்கள்!

கிரகணம் என்பது தோஷ காலமாக கருதப்படுவதால் கிரகண நேரத்தில் கோயில்களில் நடை சாத்தப்பட்டிருக்கும் இதனால் வழிபாடுகள் நடக்காது. கிரகணம் விட்ட பிறகு தோஷ நிவர்த்தி பூஜைகள் நடத்தப்பட்டு, பிறகுதான் வழக்கமான பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். சந்திர கிரகணத்தின் அன்றுதான் முழு நிலவு பிரகாசமாக ஒளிந்து பெளர்ணமியாக காட்சியளிக்கும். கோயிலுக்கு செல்லக்கூடாது எனக்கூறும் ஜோதிடர்கள் கிரிவலம் சென்றால் நல்லது என்கின்றனர். 

ஒவ்வெரு பெளர்ணமியன்றும் பக்தியோடு தெய்வத்தை வணங்கிக்கொண்டு மலையை சுற்றிவரும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் என அழைக்கப்படுகிறது. சந்திரகிரகணத்தின்போது சிவ நாமத்தை உச்சரித்தபடி கிரிவலம் சென்றால் கூடுதல் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாக ஆன்மீக பெரியவர்கள் கூறுகின்றனர். சந்திர கிரகணம் என்பதால் மலையை சுற்ற எந்த தடையும் இல்லை என்கின்றனர். கர்ப்பிணிகளுக்கு மட்டும் விதிவிலக்காக கிரிவலம் வரக்கூடாது என்கின்றனர்.

கிரகண நேரத்தில் மலையை சுற்றிவந்து பின் நீராடிவிட்டு பூஜைகள் செய்து சுவாமியை வழிபடலாம் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆக... கிரகண நேரத்தில் சாப்பிடாமல் தெய்வ சிந்தனையுடன் அமைதியாக இருந்து கிரகணம் முடிந்தபின்பு நீராடிவிட்டு கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது கோடி புண்ணியம் தரும் என்கின்றனர் ஜோதிடர்கள். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close