சந்திரகிரகணம்... தமிழகத்தில் எப்போது தெரியுமா?

  Newstm Desk   | Last Modified : 26 Jul, 2018 03:38 pm
lunar-eclipse-2018-time-in-india

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் ஜூலை 27ம் தேதி, அதாவது வெள்ளிக்கிழமை இரவு நடைபெற உள்ளது.  இதனை இந்தியாவில் வெறும் கண்களாலே காணலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சந்திர கிரகணம் ஆரம்ப காலம் இரவு 11.54 மணி சந்திர கிரகணம் மத்திம காலம் அதிகாலை 01.52 மணி. சந்திர கிரகணம் முடிவு காலம் அதிகாலை 3.49 மணி. இந்த நூற்றாண்டின் மிக நீளமான இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவின் அனைத்து பகுதிகளில் உள்ளவர்களும் கண்டு ரசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. கிரகணம் ஏற்படும் நாள் ஆடி பௌர்ணமி என்பதால் இந்த நாள் மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ரத்த நிறத்தில் சிவப்பு முழு நிலவு அதிகாலை 2.43 மணிக்கு தெரியும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தில், சந்திரனுக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் சுமார் 4 லட்சத்து 6 ஆயிரத்து 223 கிலோமீட்டர் இருக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

அடுத்த மிக நீண்ட சந்திர கிரகணம் காண இன்னும் நூறு ஆண்டுக்கு மேல் காத்திருக்க வேண்டும். அதனால், வெள்ளிக்கிழமை இரவு மொட்டைமாடிக்கு சென்று, சந்திர கிரகணத்தை கண்டு ரசிப்போம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close