சூரிய கிரகணம் வருது கூடவே ‘வைர மோதிரம்’ வருது!

  ஐஸ்வர்யா   | Last Modified : 10 Aug, 2018 09:55 am
a-solar-eclipse-is-coming-this-week-it-creates-the-effect-of-a-diamond-ring

இந்த ஆண்டில் சூப்பர் மூன், சூப்பர் மார்ஸ் பார்த்தாச்சு... அடுத்த வரிசையில் இருப்பது ‘சூப்பர் சன்’தான்!. இன்னும் இரண்டு நாட்களில் சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இதற்கு கங்கண கிரகணம் மற்றும் வளைய மறைப்பு என்ற பெயரும் உண்டு. 

பொதுவாக அமாவாசை நாளன்று தான் சூரிய கிரகணம் தோன்றும் என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சூரிய கிரகண முழு கிரகணம், பகுதி கிரகணம், கங்கண கிரகணம், கலப்பு கிரகணம் என நான்கு வகைப்படும்... நாளை மறுநாள் நடக்கவிருப்பது பகுதி கிரகணம்! இந்த வருடத்தில் நடக்கும் இரண்டாவது பகுதி கிரகணம் இந்த சூரிய கிரகணமாகும். கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி பகுதி நேர சூரிய கிரகணம் ஏற்பட்டது. இதையடுத்து 27ம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ்ந்தது. இதையடுத்து 31ம் தேதி சூப்பர் மார்ஸ் தெரிந்தது. அதாவது 15 வருடங்களுக்கு பின்னர் செவ்வாய் கோள் இன்று பூமிக்கு மிக அருகில் வந்தது. ஒரே ஆண்டில் இத்தனை அதிசயங்கள் நடந்ததையடுத்து ஆகஸ்ட் 11ம் தேதியன்று மீண்டும் பகுதி நேர சூரிய கிரகணம் நிகழவுள்ளது. ஒரு முழு சூரிய கிரகணம் மிகவும் அரிதான ஒரு நிகழ்வாகும். 

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படுகின்றது. இந்த வருடத்திற்கான சூரிய கிரகணம் ஆகஸ்ட் 11 ம் தேதி கிட்டத்தட்ட 3 மணி நேறம் 30 நிமிடங்கள் நீடித்திருக்கும் என அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சூரிய கிரகணம் நாளை மதியம் 1.32 மணிக்கு தொடங்கி மாலை 5.02 மணிக்கு முடிவடைகிறது. சூரிய கிரகணமானது சைபீசியாவின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில் 65 சதவீதம் தெளிவாக பார்க்கலாம் ஆனால் இந்தியாவில் இந்த சூரிய கிரகணத்தை தெளிவாக பார்க்க முடியாது என வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

சூரிய கிரகணத்தின்போது சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருக்கும். அப்போது சூரியனை சந்திரன் மறைக்கிறது. இதனால் சூரியனின் ஒளி  ‘வைர மோதிரம்’ போன்று பூமியின் தெரியும். அதாவது வானில் ஒரு அற்புதமான வைர ஃப்ளாஷ் அடிக்கவுள்ளது. இந்த அழகான நிகழ்வு சூரியகிரகணத்தின்போது ஒரு சில விநாடிகள் நீடிக்கும் என்றும் அப்போது சூரியன் பளிச்சென்று செந்நிற வடிவத்தில் தெரியும் என்றும் அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். சூரிய கிரகணம் 18 மாதங்களுக்கு  ஒருமுறையாவது தோன்றிவிடும் என்றும் கூறப்படுகிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close