• சபரிமலையில் 144 தடை உத்தரவு
  • சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி
  • மத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா
  • விஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
  • ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

சந்திரயான்-2 திட்டத்தில் மாற்றம்; ஜனவரியில் நிச்சயம் பறக்கும்: இஸ்ரோ

  Newstm Desk   | Last Modified : 29 Aug, 2018 04:19 am

chandrayaan-2-to-launch-2019-january

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் மிகப்பெரிய திட்டமான சந்திரயான் -2 செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பும் திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

நிலவுக்கு முதல்முறையாக சந்திரயான் செயற்கைக்கோளை இஸ்ரோ அனுப்பியதை தொடர்ந்து, நிலவில் இறங்கி, ரோவர் என்ற சிறிய வாகனம் மூலம் நிலவின் மேற்பரப்பை ஆராய்ச்சி செய்ய திட்டமிடப்பட்டது. இந்த ஆண்டு ஆக்டோபர் மாதம் விண்ணில் சந்திரயான் 2-ஐ ஏவ இருந்த நிலையில், தற்போது அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரலில் சந்திரயான்-2 ஏவப்பட்ட இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனால், இந்த புதிய தாமதம் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

ஜனவரி மாதம் வரை தள்ளிவைக்கப்பட்டதை அறிவித்த இஸ்ரோ தலைவர் சிவன், இந்த திட்டம் வெற்றிகரமாக முடியவே இந்த கால தாமதம் என தெரிவித்தார். செயற்கைகோள் நிலவில் தரையிறங்குவதிலும், ரோவர் செயல்பாடுகள் குறித்தும் வல்லுநர்கள் எழுப்பிய சந்தேகங்களை தொடர்ந்து, சில மாற்றங்களை செய்து வருவதாக கூறியுள்ளார். 

"இஸ்ரோ வரலாற்றிலேயே மிகவும் கடினமான திட்டம் இதுதான். இது வெற்றிகரமாக முடிய சில மாற்றங்களை செய்ய வலியுறுத்தியுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றார் சிவன். 

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close