நிலவுக்கு டூர் போகும் அந்த லக்கி மேன்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 16 Sep, 2018 12:57 am
elon-musk-s-spacex-says-it-signed-up-its-first-round-the-moon-tourist

உலகிலேயே முதல் முறையாக நிலவுச் சுற்றுப்பயணம் செல்லவுள்ள தனிநபரை ஸ்பேஸ் எக்ஸ் தேர்வு செய்து ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 

அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் நிறுவனம் சுற்றுலா பயணிகளை நிலாவுக்கு அழைத்து செல்ல உள்ளதாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தது. இதற்காக பிக் பால்கன் என்ற ராக்கெட்டையும் அந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன்மூலம் உலகிலேயே சுற்றுலா பயணிகளை முதன்முறையாக சந்திரனுக்கு அழைத்து செல்லும் தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஸ்பேஸ் எக்ஸ் பெற்றுள்ளது.

நிலவுச் சுற்றுப்பயணத் திட்டத்தை விரைவில் செயல்படுத்தவுள்ளதாகவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நிலவுக்கு சுற்றுப்பயணம் செல்லும் பயணி தேர்வு செய்யப்பட்டு, அவருடன் ஸ்பேஸ் எக்ஸ் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்தப் பயணி நிச்சயமாக நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க் அல்ல என்றும் அந்நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

பிக் பால்கான் ராக்கெட் மூலமாக நிலவிற்கு மனிதர்கள் சாதாரணமாக சென்று வருவதற்கான வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. தற்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மனிதனை நிலவிற்கு அனுப்பினால் அவர் நிலவிற்கு செல்லும் 25வது நபர் என்பது குறிப்பிடதக்கது.

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close