• சபரிமலையை கலவர பூமியாக மாற்ற அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு
  • அமிர்தசரஸ் ரயில் விபத்து; இன்று ஒருநாள் துக்கம் அனுசரிப்பு
  • சபரிமலை: போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது வழக்குப்பதிவு!
  • நடிகை த்ரிஷாவின் ட்விட்டர் பக்கம் முடக்கம்
  • சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

நடுவானில் ரஷ்ய 'சோயுஸ்' ராக்கெட்டில் கோளாறு; பத்திரமாக தரையிறங்கிய வீரர்கள்

  ஐஸ்வர்யா   | Last Modified : 13 Oct, 2018 04:43 am

us-russian-astronauts-survive-soyuz-emergency-landing

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்ட ரஷ்யாவின் 'சோயுஸ்' ராக்கெட்டில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து அதில் இருந்து விண்வெளி வீரர்கள் அவசரமாக வெளியேறி தரையிறங்கினர்.

கஜகஸ்தானில் இருந்து சோயுஸ் விண்கலம் ராக்கெட்டின் மூலம் புறப்பட்டது. இதில் ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சே ஆவ்சீனின் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக் ஆகியோர் பயணம் செய்தனர். இவர்களில் ஹேக்க்கு இது முதல் விண்வெளிப்பயணம் ஆகும். இவர்கள் இருவரும் 6 மாதங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்குவதாக இருந்தது என்று நாசா டிவிட்டரில் தெரிவித்துள்ளது. கிழக்கத்திய நேரப்படி காலை 4.40க்கு ராக்கெட் புறப்பட்டது. ஆனால் ஆறுமணி நேரத்துக்குள் ஹேக்கும் அவரது சக வீரரும் காலை 10.44க்கு ராக்கெட்டிலிருந்து கேப்சூல் மூலம் தரையிறங்கினர். புறப்பட்ட 90 விநாடிகளில், மணிக்கு 6 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் சென்றுக் கொண்டிருந்த ராக்கெட்டில், கோளாறு ஏற்பட்டதை இருவரும் அறிந்துள்ளனர் இதனால் அவர்கள் உடனடியாக அவசர தரையிறக்கத்தின் மூலம் தரையிறக்கப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. 
 

Newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close