பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் இருப்பது கண்டுபிடிப்பு!

  ஐஸ்வர்யா   | Last Modified : 08 Nov, 2018 07:44 pm
earth-has-three-moons-facts-on-extra-moons-confirmed-after-decades-of-speculation

பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதை ஹங்கேரி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

பூமியில் ஒன்று மேற்பட்ட நிலவு இருப்பது குறித்தவாதம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் நீடித்து வருகிறது. இதற்கு தீர்வு தரும் வகையில் பூமிக்கு கூடுதலாக 2 நிலவுகள் இருப்பதை தற்போது ஹங்கேரி ஆராய்ச்சியாளர்கள் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். அந்த இரு நிலவுகளும் தூசுக்கள் நிறைந்து காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். பூமியில் இருந்து நிலவு உள்ள தொலைவிலேயே இரு நிலவுகளும் இருப்பதாகவும் ஆனால் மங்கலான ஒளியை இவை உமிழ்வதால் கண்டறிவதில் சிக்கல் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இவற்றை முதன் முதலில் கண்டறிந்த போலந்து ஆராய்ச்சியாளர் கோர்ட்லெவ்ஸ்கி யின் பெயர் தான் இந்த நிலவுகளுக்கு சூட்டப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டிற்குள் செயற்கை நிலாவைத் தயாரித்து விண்வெளிக்கு அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளதையடுத்து தற்போதுஇயற்கையாகவே இரண்டு நிலவு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது மேலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close