செவ்வாய் கிரகத்தில் காலூன்றியது நாசாவின் 'இன்சைட்'

  shriram   | Last Modified : 27 Nov, 2018 05:27 am
nasa-s-insight-lands-in-mars

நாசா அணுப்பிய இன்சைட் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு செவ்வாய் கிரகத்தின் உட்பகுதியில் இன்சைட் விண்கலம் தீவிர ஆய்வு மேற்கொள்ள இருக்கிறது. 

செவ்வாய் கிரகத்தில் இரண்டு ஆண்டு கால ஆய்வை நடத்த, இன்சைட் என்ற பெயரில் நாசா அனுப்பிய விண்கலம் திங்களன்று பத்திரமாக தரையிறங்கியது. கடந்த மே மாதம் விண்ணில் ஏவப்பட்ட இன்சைட் விண்கலம், சுமார் 30 கோடி கிலோமீட்டர் தூரத்தை 6 மாதத்தில் கடந்துள்ளது. 

செவ்வாய் கிரகத்திற்கு சென்றவுடன், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.17 மணியளவில் செவ்வாய் கிரக வளிமண்டலத்தில் இறங்கி, சுமார் 7 நிமிடங்களில் நவீன சூப்பர்சானிக் பேராஷூட் மூலம் தரையில் பத்திரமாக இறங்கியது. செவ்வாயில் உள்ள எலீசியம் பிளாட்டினா என்ற இடத்தில், விண்கலம் தரையிறக்கப்பட்டது. இன்சைட்டை பின்தொடர்ந்து செவ்வாய் கிரகத்திற்கு இரண்டு சின்ன செயற்கைகோள்கள் சென்றுள்ளன. இவை, அங்கு இன்சைட் எடுக்கும் புகைப்படங்களை பூமிக்கு அனுப்ப உதவும். இன்சைட் எடுத்த முதல் புகைப்படம், இந்திய நேரப்படி அதிகாலை 1.30 மணியளவில் பூமிக்கு வந்தது. இன்சைட் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கியதை நேரலையில் நாசா உலகம் முழுவதும் ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close