இன்று விண்ணில் செலுத்தப்படவுள்ள பிஎஸ்எல்விசி 38 ராக்கெட்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

  ஐஸ்வர்யா   | Last Modified : 29 Nov, 2018 12:26 am

isro-to-launch-hysis-30-satellites-from-8-countries

பூமியை கண்காணிக்கும் Hy-SIS செயற்கைகோள் நாளை பி.எஸ்.எல்.வி-சி 43 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ள நிலையில், அதற்கான 28 மணிநேர கவுண்டவுன் நேற்று காலை 5.57 மணிக்கு தொடங்கியுள்ளது. 

Hy-SIS செயற்கைகோளில் சிறப்பம்சங்கள்

பூமியின் நிலப்பகுதி, வானிலை உள்ளிட்டவற்றை துல்லியமாக கண்காணிக்கும் வேலையைதான் Hy-SIS செயற்கைகோள் செய்யவுள்ளது. இந்த ராக்கெட் 380 கிலோ எடை கொண்டது. Hy-SIS செயற்கைகோள் பூமியில் இருந்து 636 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்பட உள்ளது. Hy-SIS செயற்கைக்கோளோடு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட  8 நாடுகளின் 30 செயற்கைகோள்களையும் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இதில் ஒன்று மைக்ரோ செயற்கைக்கோள் எனவும், மற்ற 29ம் நானோ செயற்கைக்கோள் எனவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Hy-SIS செயற்கைகோளை சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி சி 43 மிகவும் எடைக்குறைந்த ராக்கெட்டாகும். மேலும் Hy-SIS செயற்கைக்கோள் விண்வெளியில் ஐந்து ஆண்டுகள் பணிசெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. 

இதுக்குறித்து இஸ்ரோ தலைவர் கூறுகையில், “ சி. 43, ஐ6 செயற்கைக்கோள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் முற்றிலும் இந்திய விஞ்ஞானிகளால் தயார் செய்யப்பட்டது. வானிலையில் எந்த மாற்றமும் இல்லாததால் திட்டமிட்டப்படி விண்ணில் ஏவப்படும்.  ஐ 6 செயற்கைக்கோள் பூமியை கண்காணிப்பதற்காக அனுப்பப்படுகிறது. பூமியில் உள்ளவற்றை மிகத் துல்லியமாக கண்காணிக்க இது பயன்படும். குறிப்பாக விவசாயம், வனப்பகுதிகளை கண்காணிப்பதற்கு இந்த செயற்கைகோள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். செம்மரக்கடத்தல், மாவோஸ்டுகள் நடமாட்டம் போன்றவற்றை துல்லியமாக தெரிவிக்ககூடியது. கடந்த முறை விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள் விண்ணில் சென்ற மூன்று நாட்களில் நிலை நிறுத்தப்பட்டு அதன் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகிறது.

ஜிசாட் 19 , ஜிசாட் 29, மற்றும் பிரான்ஸ் நாட்டில் இருந்து டிசம்பர் 5 தேதி விண்ணில் செலுத்தப்படும் மிகப்பெரிய செயற்கைக்கோளான ஜி.சாட் 20 ஆகியவற்றின் மூலம் அதிவேக இணைய சேவை கிடைக்கும்” எனக் கூறினார். 

Newstm.in 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.