2021ல் மனிதனை விண்ணுக்கு அனுப்புவோம்: இஸ்ரோ சிவன் உறுதி

  Newstm Desk   | Last Modified : 30 Nov, 2018 09:23 am

isro-targets-2021-for-human-mission-shivan

2021ம் ஆண்டு இந்தியா சார்பில் விண்ணுக்கு மனிதனை அனுப்புவோம் என்று சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இஸ்ரோ தலைவர் கே.சிவன் உறுதியளித்துள்ளார். 

பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் மூலம் பூமியை கண்காணிக்கும் எச்.ஒய்.எஸ்.ஐ.எஸ். என்ற செயற்கைகோள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 30 செயற்கைகோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணுக்கு நேற்று செலுத்தியது.

இதனை தொடர்ந்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இஸ்ரோ தலைவர் கே.சிவன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர், "பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் வெற்றிகரமாக தீர்மானிக்கப்பட்ட சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ராக்கெட் மூலம் ‘எச்.ஒய்.எஸ்.ஐ.எஸ்.’ செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், வணிக ரீதியாக விண்ணுக்கு அனுப்பப்பட்ட 30 செயற்கைகோள்கள், வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தபட்டுள்ளன. ‘எச்.ஒய்.எஸ்.ஐ.எஸ்.’ செயற்கைகோள், சண்டிகாரில் உள்ள ஆய்வு கூடத்தில் தயாரிக்கப்பட்டது. 

இந்த செயற்கை கோள் விவசாய மேம்பாட்டுக்கு முழுமையாக பயன்படுத்த முடியும். இஸ்ரோ இதுவரை 20 நாடுகளை சேர்ந்த 270 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தியுள்ளது. இது உலக அளவில் இஸ்ரோவுக்கு நன்மதிப்பை பெற்று தந்துள்ளது. புவி வட்டப்பாதையில் இப்போது இஸ்ரோவின் 47 செயற்கைகோள்கள் தகவல் தொடர்புகள், புவி கண்காணிப்பு, அறிவியல் ஆய்வுகள், கடல்சார் ஆய்வுகள் போன்ற பயன்பாட்டுக்காக செயல்பட்டு வருகின்றன.

‘ககன்யான்’ விண்கலம் விண்ணுக்கு அனுப்புவதற்கான பணிகள் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறது. ககன்யானுக்கு முன்னதாக ஆளில்லாத முதலாவது விண்கலம் 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. தொடர்ந்து மேலும் ஒரு விண்கலம் 2021ம் ஆண்டு ஜூலை மாதம் விண்ணில் செலுத்தப்படுகிறது.

அதனை தொடர்ந்து ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் மனிதர்கள் செல்லும் விண்கலம் விண்ணில் செலுத்தப்படுகிறது" என்றார். 

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.